×

சாட்டை துரைமுருகன் மீதான குண்டர் சட்டம் ரத்து: கருத்து சுதந்திரத்துக்கு எல்லை உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை

சென்னை: யுடியூபர் சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டாதகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் நடத்து கொண்டதாக கூறி யுடியூபரான நாம் தமிழர் கட்சியை சேர்ந்த துரைமுருகன் என்ற சாட்டை துரைமுருகன் மீது நான்கு வழக்குகள் போலீசார் பதிவு செய்து கைது செய்தனர்.இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் தேதி சாட்டை துரைமுருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருவள்ளூர் கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து சாட்டை துரைமுருகனின் மனைவி மாதரசி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கணவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. பேச்சுரிமை என்பது இந்திய அரசியல் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை. ஆனால் அதற்கும் ஓர் எல்லை உள்ளது. மனுதாரரின் கணவர் துரைமுருகன் எல்லையை மீறாமல் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்….

The post சாட்டை துரைமுருகன் மீதான குண்டர் சட்டம் ரத்து: கருத்து சுதந்திரத்துக்கு எல்லை உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Duraimurugan ,Madras High Court ,Chennai ,Chattay Duraimurugan ,Dinakaran ,
× RELATED சென்னையில் வணிக அலுவலக இடங்களுக்கு...