×

இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் அறிவிப்பு!!

கொழும்பு: இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். இலங்கையில் சுதந்திரத்துக்குப் பிறகு ஏற்பட்டிருக்கிற வரலாறு காணாத விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர். பொங்கி எழுந்த பொதுமக்கள் லட்சக்கணக்கில் ஒன்று திரண்டு கடந்த சனிக்கிழமை கொழும்பில் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். அங்கிருந்த பொருள்களையெல்லாம் அடித்து நொறுக்கினார்கள். இதையடுத்து இன்று அதிகாலை இலங்கையின் ராணுவ விமானமான அன்டோனோவ்-32 என்ற விமானத்தில் இருந்து அண்டை நாடான மாலத்தீவுக்கு புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது மனைவி மற்றும் மெய்க்காப்பாளர் அடங்கிய குழுவும் சென்றதாக குடியுரிமை அதிகாரிகள், ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.மாலத்தீவின் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 3 மணியளவில், கோத்தபய பயணித்த விமானம் தலைநகர் மாலேவிற்கு சென்றடைந்தது. மேலும் அவரது சகோதரரும், முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சேவும் நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே கோத்தபய மாலத்தீவுக்கு தப்பி சென்றதை அடுத்து இலங்கையில் மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. போராட்டக்காரர்கள் மீது போலீஸ் கண்ணீர் புகை வீசி கூட்டத்தை கலைக்க முயற்சி செய்து வருகின்றனர். இலங்கையில் பிரதமர் அலுவலகத்தை ஏராளமானோர் முற்றுகையிட்டுள்ள நிலையில் அங்கு அவசர நிலை பிரகடனம்ப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார். ரணிலை தற்காலிக அதிபராக கோத்தபய ராஜபக்சே நியமனம் செய்துள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளதால் அங்கு குழப்பம் நீடிக்கிறது. இதற்கிடையே மாலத்தீவில் தஞ்சம் அடைந்துள்ள கோத்தபய ராஜபக்சே துபாய் தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. இலங்கை அதிபராக இருக்கும் போதே துபாயில் குடியேறுவதற்கு வசதியாக தற்காலிக அதிபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். …

The post இலங்கையின் தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே நியமிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Speaker of Parliament ,Ranil Wickremesinghe ,President ,Sri Lanka ,Colombo ,Speaker of the Parliament ,Ranil Wickramasinghe ,Sri ,Lanka ,
× RELATED இலங்கை அதிபர் தேர்தலில் ரணில் போட்டி: அமைச்சர் தகவல்