×

949 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிவன் கோயில் மாயம்.. அமைச்சரிடம் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் புகார்

சென்னை: 949 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிவன் கோயில் மாயம் என முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவுக்கு புகார் அனுப்பி உள்ளார். கர்நாடகாவின் தும்சூர் மாவட்டத்தில் உள்ள கோட்டேகிரி என்ற குக்கிராமத்தில் உள்ள சிவன் கோயிலுக்கு அருகே இருக்கும் அரச மரத்திற்கு அடியில், கல்வெட்டு கண்டறியப்பட்டது. ராஜராஜ சோழனின் முதல் பேரனாகிய ஸ்ரீ ஸ்வஸ் ஸ்ரீ உடையார் ராஜாதிராஜ தேவரால் பொரிக்கப்பட்ட கல்வெட்டுகளில் பழங்கால தமிழ் எழுத்துகள் மற்றும் கிரந்த எழுத்துக்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. தன்னுடைய தந்தை ராஜேந்திர சோழர்  நினைவாக  இக்கோயிலுக்கு ராஜஜேந்திர சோழீசுவரம் என்று உடையார் ராஜாதிராஜ தேவர் பெயரிட்டுள்ளார். கிட்டத்தட்ட 949 வருடங்கள் பழமையான இக்கோயில் இன்று காணாமல் போயுள்ளதாகத் தெரிவித்துள்ள பொன்மாணிக்க வேல், கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த ராஜாதிராஜ விந்தகர் உற்சவர் ஐம்பொன் சிலையும், கற்சிலைகளும் மாயமாகி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் சிவன் கோயிலில் இருந்து திருடு போன சிலைகளை கர்நாடக அரசுடன் இணைந்து மீட்க வேண்டும் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் புகாரில் தெரிவித்துள்ளார்….

The post 949 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிவன் கோயில் மாயம்.. அமைச்சரிடம் முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் புகார் appeared first on Dinakaran.

Tags : Shiva Temple ,IG ,Bon Maniguel ,Chennai ,Bon Manikavel ,Hindu Sadayat ,Mayam ,Bonn Maniguel ,Minister ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...