×

கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு 500 பேருக்கு இலவச கண் சிகிச்சை

கும்மிடிப்பூண்டி: கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு, திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீனவரணி சார்பில், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் நேற்று மாவட்ட மீனவரணி அமைப்பாளர் என்.ஆறுமுகம் ஏற்பாட்டில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்றத் தலைவர் தனசேகர், துணை தலைவர் சிலம்பரசன், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று துவக்கி வைத்தார். இதில் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனையின் டாக்டர் சிஷு, டாக்டர் அபினயா, மாவட்ட முகாம் ஒருங்கிணைப்பாளர் ராமராஜ் உள்பட 10 பேர் குழு, அப்பகுதி மக்களுக்கு கண் பரிசோதனை மற்றும் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டது. கண் பரிசோதனை செய்து கண்ணாடி தேவைப்பட்டோருக்கு இலவசமாக வழங்கப்பட்டது.மேலும் முகாமில் பங்கேற்ற மக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, கண்நீர் அழுத்த பரிசோதனை, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்புரை பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆரம்பாக்கம், நொச்சிக்குப்பம், பாட்டைக்குப்பம், எம்.ஆர்.கண்டிகை, எகுமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை செய்து பயன் பெற்றனர். 25க்கும் மேற்பட்டோர் இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்காக சென்னை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்….

The post கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு 500 பேருக்கு இலவச கண் சிகிச்சை appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Tiruvallur East District ,Meenavarani ,
× RELATED ரசாயன கல் மூலம் பழுக்க வைத்த 1.5 டன் மாம்பழம் பறிமுதல்