×

காளி ஆவணப்பட விவகாரம்: லீலா மணிமேகலைக்கு டெல்லி ஐகோர்ட் சம்மன்

புதுடெல்லி: காளி ஆவண திரைப்படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலை நேரில் ஆஜராகுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. செங்கடல், மாடத்தி போன்ற ஆவண திரைப்படங்கள் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை. அந்த வகையில் இவர் ஜூலை 2ம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்து கடவுளான காளி ஒரு கையில் எல்.ஜி.பி.டி கொடியும் மற்றொரு கையில் சிகரெட்டுடன் நிற்பது போல ‘‘காளி” எனும் ஆவண திரைப்பட போஸ்டரை வெளியிட்டார். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது.இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ராஜ் கௌரவ் என்பவர் தொடர்ந்த வழக்கானது டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அபிஷேக் குமார் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, லீனா மணிமேகலை நேரில் ஆஜராக சம்மன் அனுப்பி உத்தரவிட்டார். மேலும் லீனா மணிமேகலையின் தயாரிப்பு நிறுவனமான டூரிங் டாக்கீஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்டும் விளக்கமளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்….

The post காளி ஆவணப்பட விவகாரம்: லீலா மணிமேகலைக்கு டெல்லி ஐகோர்ட் சம்மன் appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,Leela Manimekalai ,New Delhi ,Leena Manimegali ,
× RELATED 70,772 கிலோ ஹெராயின் மாயம்; ஒன்றிய உள்துறை...