×

உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ சிறப்பு முகாம் நேற்று நடந்தது.  வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், வரதராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். முகாமில், உத்திரமேரூர் வட்டாரத்திலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டை வழங்குவதற்காக மருத்துவர்களை கொண்டு அளவீடு பணியும் நடைபெற்றது. அடையாள அட்டைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்யப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து சுய தொழில் தொடங்குவதற்காக ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் கடன் உதவி வழங்க ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டது. உத்திரமேரூர் வட்டத்தில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்….

The post உத்திரமேரூரில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Uttarmerur ,Uttara Merur ,Uttara Merur District Development Office ,Uttamerur ,
× RELATED இணையவழியில் ஆவணங்கள் பெற பழங்குடியினருக்கு சிறப்பு பயிற்சி முகாம்