×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் ஜெயலலிதா டிரைவரின் அண்ணனிடம் மீண்டும் விசாரணை; வழக்கை வாபஸ் பெறச்சொல்லி மிரட்டியதில் தொடர்பு?

சேலம்: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவரின் அண்ணன் தனபால், நண்பர் ரமேசிடம் சேலம் போலீசார் மீண்டும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் காவலாளி கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இவ்வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் டிரைவரான சேலம் மாவட்டம் இடைப்பாடி சமுத்திரம் சித்திரைபாளையத்தை சேர்ந்த கனகராஜ், ஆத்தூரில் மர்மமான முறையில் வாகன விபத்தில் உயிரிழந்தார். தன் கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக கனகராஜின் மனைவி கலைவாணி புகார் கொடுத்தார். இதன்பேரில் போலீசார் அந்த வழக்கை மீண்டும் எடுத்து விசாரித்தனர். பின்னர் கொடநாடு வழக்கோடு, கனகராஜ் வழக்கையும் சேர்த்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் ஆதாரங்களை அழித்து, சாட்சியை களைத்தாக கனகராஜியின் அண்ணனான தனபால், நண்பர் ரமேஷ் ஆகியோரை கொடநாடு போலீசார் கைது செய்தனர். சிறையில் இருந்த அவர்கள் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்து, கோத்தகிரியில் நிபந்தனை அடிப்படையில் தங்கியுள்ளனர். இதனிடையே சென்னையில் வசிக்கும் இறந்த கனகராஜியின் மனைவி கலைவாணி (28), கடந்த மாதம் 3ம் தேதி சேலம் வந்தார். அவரை கனகராஜின் மற்றொரு அண்ணனான  பழனிவேல் (44), மிரட்டி கனகராஜ் சாவில் சந்தேகம் இருப்பதாக கொடுத்த புகாரை வாபஸ் வாங்க வேண்டும். இல்லையென்றால் கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்து, சேலையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்து, அங்கிருந்து வேகமாக தப்பிய கலைவாணி, ஜலகண்டாபுரம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணை நடத்தி,  கடந்த 28ம் ேததி வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பழனிவேலை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விவகாரத்தில் பழனிவேலை கொண்டு கலைவாணியை தனபால், ரமேஷ் ஆகியோர் மிரட்டச் செய்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அதுதொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி அபிநவ் உத்தரவிட்டார். இதன்பேரில் ஜாமீனில் வெளிவந்து கோத்தகிரியில் தங்கியிருந்த தனபால், ரமேஷ் ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் சேலத்திற்கு பிடித்து வந்தனர். பின்னர், இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து எஸ்பி அபிநவ், டிஎஸ்பி சங்கீதா தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கலைவாணியை மிரட்டச் சொன்னது உண்மைதானா? என்ற கோணத்தில் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், ஜாமீனில் வெளிவந்தபின், தனபாலும், ரமேசும் யாரிடமெல்லாம் பேசினார்கள்? எனவும் விசாரிக்கின்றனர். இதனிடையே ஐஜி சுதாகர் அமைத்த ஒரு தனிப்படை போலீசார் நேற்று சேலம் வந்தனர். அவர்கள், தனபால், ரமேசிடம் மீண்டும் கொடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், கனகராஜ் இறப்பதற்கு முன் கர்நாடக மாநிலம் பெல்லாரி பகுதிக்கு சென்றது பற்றி தனபால், ரமேசிடம் விசாரிக்கின்றனர். அதாவது கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளை நடந்த அடுத்தநாள் கனகராஜின் செல்போன் சிக்னல் பெல்லாரி பகுதியை காட்டியுள்ளது. அதனால், அங்கு எதற்காக கனகராஜ் சென்றார்?, யாரை சந்தித்தார்? என்ற விவரத்தை தனபால் மற்றும் நண்பர் ரமேசிடம் தெரிவித்திருந்தாரா என விசாரித்து வருகின்றனர். …

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரம் ஜெயலலிதா டிரைவரின் அண்ணனிடம் மீண்டும் விசாரணை; வழக்கை வாபஸ் பெறச்சொல்லி மிரட்டியதில் தொடர்பு? appeared first on Dinakaran.

Tags : Jailalita ,Kadnadu ,Salem ,Tanabal ,Ramesh Salem ,Jailalita Driver ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...