×

மாங்காடு அருகே பரபரப்பு வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம ஆசாமிகளுக்கு வலை

குன்றத்தூர்: மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் தில்லை நடராஜர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (29), இவர், வளசரவாக்கத்தில் உள்ள தனியார் கார் ஷோரூமில் வேலை செய்கிறார். நேற்றுமுன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருச்சியில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுவிட்டார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் அந்த வழியாக ரோந்து பணியில் இருந்த மாங்காடு போலீசார், ராஜேஷ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வீட்டில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது வீட்டில் 18 பவுன் நகை மற்றும் ரூ. 1.50 லட்சம் பணம் வீட்டில் வைத்திருந்ததாக கூறினார். தகவலறிந்த மாங்காடு போலீசார், விரைந்து வந்து கொள்ளை சம்பவம் நடந்த வீட்டை சோதனை செய்தனர். வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள், வீட்டில் இருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மேலும், மாங்காடு போலீசார் அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்….

The post மாங்காடு அருகே பரபரப்பு வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை: மர்ம ஆசாமிகளுக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Mangadu ,Kunradathur ,Rajesh ,Thillai Natarajar Nagar ,Sikkarayapura ,Valasaravak ,
× RELATED பூந்தமல்லியில் இந்து அமைப்பு மாநில...