×

தமிழில் புதுப்படம் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய ஸ்ருதி

ஐதராபாத்: மலையாளத்தில் நடிகர் பிருத்வி ராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான ‘லூசிஃபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘காட்ஃபாதர்’ படத்தில், மோகன் ராஜா இயக்கத்தில் சல்மான்கான், நயன்தாரா ஆகியோருடன் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அடுத்து அஜித் குமார் தமிழில் நடித்த ‘வேதாளம்’ என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘போலா சங்கர்’ படத்தில், மெஹர் ரமேஷ் இயக்கத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இதில் அவரது தங்கை வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்நிலையில், சிரஞ்சீவியின் 154வது படத்தை பாபி இயக்குகிறார். இதற்கு ‘வால்டேர் வீரய்யா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சிரஞ்சீவி ேஜாடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங்கில் நேற்று பங்கேற்று நடித்த அவர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் ஜோடியாக ‘சலார்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தவிர, பாலகிருஷ்ணாவின் 107வது படத்தில் அவருடைய ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தை கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். தொடர்ந்து தெலுங்கில் கவனம் செலுத்தும் ஸ்ருதிஹாசன், தமிழில் டீகே இயக்கத்தில் நடிப்பது குறித்து இன்னும் உறுதி செய்யவில்லை….

The post தமிழில் புதுப்படம் கிடைக்காததால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய ஸ்ருதி appeared first on Dinakaran.

Tags : Shruti ,Hyderabad ,Mohanlal ,Prithvi Raj ,
× RELATED இசையமைப்பில் மீண்டும் பிஸியான ஷ்ருதி ஹாசன்.!