×

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை..!!

தருமபுரி: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆற்றின் குறுக்கே கால்நடைகளை அழைத்துச் செல்லக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால் காவிரியில் 20,000 கன அடி நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒருவாரமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பியதாலும், கர்நாடகாவில் இருந்து தமிழகத்தில் காவிரிக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் காவிரி நுழையும் பகுதியான பிலிகுண்டுலுவுக்கு இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 20,000 கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் ஒகேனக்கல் காவிரியில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக சுற்றுலா பயணிகள் செல்ல 2வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்குள்ள கிருஷ்ணசாகர், கபினி அணைகள் நிரம்பி வரும் நிலையில், உபரிநீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. இன்று மாலை மேலும், நீர்வரத்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது….

The post காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை: ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 2வது நாளாக தடை..!! appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Okanagan Falls ,Parisal ,Dharampuri ,Okanagan ,
× RELATED மேலாண்மை ஆணையத்தை கண்டித்து...