×

சார்: விமர்சனம்

1950-களில் மாங்கொல்லையில் பள்ளிக்கல்வி மறுக்கப்பட்டு ஆண்டான், அடிமைத்தனம் நிலவுகிறது. மக்களின் அடிமைத்தனத்தை உடைத்து, தொடக்கப் பள்ளியின் மூலம் கல்வி அளிக்க முற்படும் அண்ணாதுரை ஆசிரியரை, ‘சாமி அடிச்சிருச்சி’ என்று சொல்லி, பைத்தியம் பிடிக்க வைக்கிறது மேல்தட்டுக் குடும்பம். 1960களில் அண்ணாதுரை மகன் பொன்னரசன் (சரவணன்), தொடக்கப் பள்ளியை நடுநிலைப் பள்ளியாக மாற்றி பாடம் நடத்துகிறார். அண்ணாதுரையின் கதியே அவருக்கும் ஏற்படுகிறது. 1980களில் அதே பள்ளிக்கு ஆசிரியராக வரும் பொன்னரசன் மகன் சிவஞானம் (விமல்), தனது தாத்தா, தந்தையின் மேல்நிலைப் பள்ளி கனவை நிறைவேற்றினாரா, இல்லையா என்பது மீதி கதை.

பழமைவாதத்தை உடைத்து, கல்வியை மக்களிடம் கொண்டு செல்ல முன்னோர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பதை இப்படம் மூலம் நேர்த்தியாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் போஸ் வெங்கட். தமிழாசிரியராக ‘பருத்திவீரன்’ சரவணன் வாழ்ந்திருக்கிறார். ஓய்வுபெற்றதையே மறந்து, மறுநாளும் பள்ளிக்குச் சென்ற பின்பு அதை உணர்ந்து கலங்குவது உருக்கம். தாத்தா, தந்தையின் கனவை நிறைவேற்றப் பாடுபடும் விமல் சாயாதேவியைக் காதலிப்பதும், அவருக்காக உருகுவதும் கலகலப்பு. அவரும், சாயாதேவியும் போட்டி போட்டு நடித்துள்ளனர். சரவணன் மனைவியாக வரும் ரமா, வில்லன்களாக சிராஜ்.எஸ், வ.ஐ.ச.ஜெயபாலன், ஆர்.கே.விஜய் முருகன் கவனிக்க வைக்கின்றனர். 3 காலக்கட்டத்தை நேர்த்தியாக ஒளிப்பதிவு செய்த இனியன் ஜே.ஹரீஷ், பின்னணி இசையில் கதையின் அழுத்தத்தை உணர வைத்த சித்து குமாரின் பணி நிறைவாக இருக்கிறது. பள்ளியில் விமல், சாயாதேவியின் காதலுக்கு மாணவர்கள் உதவுவது நெருடலாக இருக்கிறது.

The post சார்: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mangolla ,Annadurai ,Sami Adichiruchi ,Annadurai Magan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 6 வீடுகளின் சுவர் இடிந்து விழுந்தது