×

விஜய்யை இயக்காதது ஏன்?: ஹரி

சென்னை: தமிழில் பிரசாந்த், விக்ரம், சிம்பு, சரத்குமார், சூர்யா, விஷால், பரத், தனுஷ், அருண் விஜய் ஆகியோர் நடித்த 16 படங்களை இயக்கியுள்ள ஹரி, இதுவரை விஜய், அஜித் குமாரை இயக்கவில்லை. தற்போது அவரது இயக்கத்தில் வெளியான ‘யானை’ படம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதையடுத்து அவர் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி ஹிரோவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஹரி அளித்துள்ள பேட்டியில், விஜய்யை இதுவரை இயக்காதது குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் ஆசை எனக்கு இருக்கிறது. அவரை நான் பலமுறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். சில கதைகளை அவரிடம் சொல்லியிருக்கிறேன். வருங்காலத்தில் கண்டிப்பாக விஜய் நடிக்கும் படத்தை இயக்குவேன்’ என்றார்….

The post விஜய்யை இயக்காதது ஏன்?: ஹரி appeared first on Dinakaran.

Tags : Vijay ,Hari ,Chennai ,Prasanth ,Vikram ,Simbu ,Sarathkumar ,Surya ,Vishal ,Bharath ,Dhanush ,Arun Vijay ,
× RELATED எல்லாமே கவிதை மாதிரி இருந்துச்சி - Vijay Antony Speech at Mazhai Pidikatha Manithan Teaser launch