×

அதிபர் கோத்தபயவை பதவி விலக வலியுறுத்தி இலங்கையில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்: விற்பனையை நிறுத்தியது ஐஓசி நிறுவனம்

கொழும்பு: இலங்கையில் அதிபர் கோத்தபயவை பதவி விலக வலியுறுத்தி, மக்கள் மீண்டும் மிகப்பெரிய அளவில் போராட்டம் தொடங்கி உள்ளனர். இதன் காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு இலங்கை ஐஓசி நிறுவனம் பெட்ரோல் விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவு கடும் நிதி, பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொருட்கள், எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், சிலோன் பெட்ரோலியம் கார்பரேஷன் பெட்ரோல் கொள்முதல் செய்ய அந்நிய செலாவணி இல்லாமல், கடந்த 27ம் தேதியுடன் பெட்ரோல் விற்பனையை நிறுத்தி விட்டது. மக்கள் நீண்ட வரிசையில் பல நாட்கள் நின்று டோக்கன் முறையில் பெட்ரோல் வாங்கி செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பெட்ரோல் வாங்குவதற்கு வரிசையில் நின்றதில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். பொருளாதார சீரழிவுக்கு காரணமான ராஜபக்சே சகோதரர்களை பதவியில் இருந்து விலகும்படி மக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். அதிபர் கோத்தபய ராஜபக்சே மட்டும் பதவியில் நீடித்து வருகிறார். அவரையும் பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் மக்கள் போராட்டம், பேரணி நடத்தி வந்தனர். கடந்த சில வாரங்களாக இந்த போராட்டம் ஓய்ந்திருந்தது. இந்நிலையில், பொதுமக்களின் போராட்டம் மீண்டும் மிகப்பெரிய அளவில் வெடிக்கும் சூழல் தற்போது நிலவுகிறது. பல்கலைகழக மாணவர்கள் தலைநகர் கொழும்புவில் நேற்று போராட்டம்நடத்தினர். இது மேலும் தீவிரமாகும் சூழல் நிலவுகிறது. இதன் காரணமாக,  பெட்ரோல் விற்பனையை 2 நாட்கள் நிறுத்தி வைப்பதாக, இந்திய எண்ணெய் நிறுவனத்தின் துணை நிறுவனமான இலங்கை ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து இலங்கை ஐஓசி நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் மனோஜ் குப்தா தனது டிவிட்டரில், `மக்கள் போராட்டத்தை முன்னிட்டு, சில்லறை விற்பனை நிலையங்களுக்கான பெட்ரோல் வினியோகத்தை உடனடியாக நிறுத்தி வைக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வெள்ளி, சனிக்கிழமை ஆகிய 2 நாட்கள் பெட்ரோல் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது,’ என்று கூறியுள்ளார்.  அதே நேரம், திரிகோணமலையில் உள்ள இலங்கை ஐஓசி கிளையின் மூலம் சிலோன் பெட்ரோலியம் கார்பரேஷன், தொழில் நிறுவனங்களுக்கான பெட்ரோல் வினியோகிக்கப்படும் என்று அவர் டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே, ரஷ்யாவில் இருந்து தள்ளுபடி விலையில் பெட்ரோல் கொள்முதல் செய்வதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிய வந்துள்ளது….

The post அதிபர் கோத்தபயவை பதவி விலக வலியுறுத்தி இலங்கையில் மீண்டும் வெடிக்கும் போராட்டம்: விற்பனையை நிறுத்தியது ஐஓசி நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : IOC ,Colombo ,Sri Lanka ,President ,Kothabaya ,Chancellor ,Gothabha ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...