×

தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

பெரம்பூர்:  கொளத்தூர் ஜி.கே.எம் காலனி 24வது தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (40).  இவர் நேற்று முன்தினம் பெரம்பூர் வடிவேல் மெயின் ரோட்டில் உள்ள முருகேசன் (50) வீட்டில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் இயங்காத காரணத்தினால் சுவிட்ச்சை ஆப் செய்யாமல் மீண்டும்  பிளக்கை பிடுங்கி உள்ளார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து செம்பியம் விசாரிக்கின்றனர். உயிர் இழந்த கார்த்திகேயனுக்கு  மனோன்மணி என்கின்ற மனைவியும் ஸ்வேதா என்கின்ற 4 வயது குழந்தையும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Perambur ,Karthikeyan ,24th Street ,Kolathur GKM Colony ,Perambur Vadivel ,Dinakaran ,
× RELATED சின்னசேலம் அருகே நெஞ்சு வலி ஏற்பட்டு லாரி ஓட்டுநர் உயிரிழப்பு