×

கார் ரேஸில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ்

அபுதாபி: அஜித்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் கார் ரேஸ் போட்டிகளில் கலந்து கொண்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கார் ரேஸிங் குறித்த விஷயங்களை கேட்டறிந்து, அதற்கேற்ப உடை அணிந்து கார் ரேஸ் போட்டியில் அவர் ஈடுபடும் காட்சிகள் உள்ளன. மேலும், இந்த பதிவில் ‘அதிசய அனுபவங்களுடன் நினைவுகளை உருவாக்குகிறேன்’ என்று கேப்ஷனாக பதிவிட்டுள்ளார். அபுதாபியில் நடைபெற்ற கார் ரேஸில்தான் கீர்த்தி சுரேஷ் பங்கேற்றிருக்கிறார்.

ஏற்கனவே இதற்காக அவர் பயிற்சிகள் எடுத்தாராம். கடந்த ஓராண்டாக அவர் கார் பந்தயத்துக்கான பயிற்சிகள் எடுத்து, சில மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். இதையடுத்து இந்த சர்வதேச போட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் பெற்றிருக்கிறார்.இந்த வீடியோவுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ் கிடைத்துள்ளது. குறிப்பாக குஷ்பூ, சாந்தனு, பவித்ரா லட்சுமி, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா, லட்சுமி, ராஷி கன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் இந்த பதிவிற்கு லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கார் ரேஸில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Keerthy Suresh ,Abu Dhabi ,Ajith ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடுவானில் தொழில்நுட்ப கோளாறு : அபுதாபி சென்ற விமானம் தரையிறக்கம்