×

தூங்காநகரின் நெடுநாள் நெரிசலுக்கு வந்தாச்சு தீர்வு மெட்ரோ ரயில் திட்டம் ரெடி… ஜூட்

*ஆய்வறிக்கை அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரி குழு ஆய்வுமதுரை :    மதுரை மாநகரம் ஆன்மிகச் சிறப்புடன், புராதன பெருமைக்குரிய வரலாற்று நகரமாகும். 148 சதுர கி.மீ. பரப்பளவிற்கு விரிந்துள்ள இந்நகரத்தில் 22 லட்சத்திற்கும் அதிக மக்கள் வாழ்கின்றனர். மதுரை நகர்ப்புறம் என்கிற எல்லை தாண்டி திருமங்கலம், மேலூர், பெருங்குடி கடந்தும் புறநகர் பகுதிகளில் குடியிருப்புகள் நாளுக்கு நாள் விரிவடைந்து வருகின்றன.திமுக ஆட்சியில் பாலங்கள்…  பன்னாட்டு விமான நிலையம், ஐகோர்ட் கிளை, ஐ.டி. பூங்கா என சகலமும் அமைந்துள்ளதால் மதுரை நகரமானது வளர்ந்து கொண்டே போகிறது. நாளுக்குநாள் வாகனங்களும் புற்றீசலாக பெருகி வருகிறது. இதன் விளைவாக, மதுரை நகருக்குள் வாகன போக்குவரத்து நெருக்கடி எகிறி வருகிறது. மதுரைக்குள் கடந்த திமுக ஆட்சிக் காலத்திலேயே பலதரப்பட்ட பாலங்கள் கட்டுமானம் கண்டது. ஓரளவு நகர் நெரிசலுக்கு தீர்வு கண்டது. அதிமுக ஆட்சி காலத்தில் அரைகுறையாக விடப்பட்டிருந்த பாலங்கள் பணிகளை நிறைவு செய்து, இப்போதும் நகரின் பல்வேறு இடங்களிலும் புதிய பாலங்கள் திறந்து திறந்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் கோரிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பாலங்களுக்கான திட்டங்களையும் அறிவித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக வைகை ஆற்றின் இருகரையும் விரிவான சாலையாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. எனினும் பெருகி வரும் மக்கள் நெருக்கத்தாலும், வாகனங்கள் அதிகரிப்பாலும் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது நீடித்துக்கொண்டே இருக்கிறது.நெருக்கடியை தீர்க்க…எதிர்காலத்தில் நகருக்குள் நெருக்கடியற்ற நிலை ஏற்படுத்தும் விதத்தில், நெரிசலுக்கு தீர்வு தரவும், மக்களின் போக்குவரத்தை எளிமைப்படுத்தவும் சென்னையை போல் மதுரையில் மெட்ரோ ரயில்திட்டம் நிறைவேற்றிட தொடர்ந்து கோரிக்கை இருந்து வந்தது. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அந்தத்திட்டம் கொண்டு வருவது தொடர்பான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி, இதற்காக பாலாஜி ரயில் ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அந்நிறுவனம், மதுரையில் மெட்ரோ ரயில் தொடர்பான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்தது. சட்டசபையிலும் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருவதை உறுதிப்படுத்தினார்.

அறிக்கை தயாரிப்பு…இதைத்தொடர்ந்து நடந்து வந்த தொடர்ந்த ஆய்வுகள் மதுரையில் இந்த மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றுவதற்கான தேவையும், சகல வசதிகளும் இருப்பதை உறுதிப்படுத்தின. இந்த திட்டத்தை நிறைவேற்றும் சாத்தியக்கூறுகள் இருப்பதற்கான இறுதி ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டு, இந்த அறிக்கை தமிழக அரசிடம் வழங்கப்பட்டது.அதிகாரிகள் ஆய்வு: இதைத்தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் கழக முதன்மை செயலாளர் மற்றும் மேலாண் இயக்குநரான, ஐஏஎஸ் அதிகாரி சித்தீக் தலைமையில் குழு மதுரைக்கு நேற்று வந்தது.  இவர்கள் நகருக்குள் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றுவதற்கான வரைபடம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுடன், புறநகரின் முக்கிய இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் மதுரை முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  இதில் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டதுடன், விபரங்கள் பெறப்பட்டன. மதுரையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பான பணிகள் வேகமெடுத்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.எங்கே துவங்குது, எங்கே முடியுது?மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தில் மதுரை மாட்டுத்தாவணியில் துவங்கும் இந்த வழித்தடம், கே.கே.நகர், அண்ணாநகர், தெப்பக்குளம், முனிச்சாலை, கீழவாசல், கீழவெளி வீதி, தெற்குவாசல், பெரியார் பஸ் நிலையம், அரசரடி, காளவாசல், பாத்திமா கல்லூரி, ஆனையூர், தபால்தந்தி நகர், பார்க்டவுன், நத்தம் ரோட்டில், மகாலெட்சுமி நகர், மூன்றுமாவடி வழியாக சென்று கடைசியாக மாட்டுத்தாவணியை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மொத்த தூரம் சுமார் 35 கிமீ திட்டத்தின் மதிப்பீடு ரூ.5ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் எனத்தெரிகிறது. இதனை இரண்டு கட்டமாக நிறைவேற்றப்படலாம்.  இத்திட்டத்தை விரிவாக்கம் செய்து, மதுரை புறநகர் பகுதிகளை இணைக்க, மெட்ரோ ரயில் பாதையாக, திருமங்கலத்தில் தொடங்கி, எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் தோப்பூர், திருநகர், திருப்பரங்குன்றம், பெரியார் பஸ்ஸ்டாண்ட், ரயில் நிலையம், யானைக்கல், கோரிப்பாளையம், தல்லாகுளம், மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட்,  ஐகோர்ட் கிளை வழியாக மேலூர் வரை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக  தெரிகிறது. முழுமையான ஆய்வுக்குப்பிறகே இந்த வழித்தடங்கள் இறுதிப்படுத்தப்படுகிறது.   மாநில அரசுக்கு மக்கள் பாராட்டுசமூக ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘மதுரைக்கு தொழில், வர்த்தகம், வேலை வாய்ப்புக்காக வெளியூர் மக்கள் பல லட்சம் பேர் வந்து செல்கின்றனர். மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம்  உள்ளிட்ட பல்வேறு கோயில்களுக்கும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர்.  மாநகரில் தற்போதுள்ள வீதிகளை விஸ்தரிக்க வாய்ப்பில்லை. முக்கிய வீதிகள் அனைத்தும் ஒருவழி பாதையாகி விட்டன. ஆனாலும் போக்குவரத்து நெரிசலை அதிகாரிகள் சமாளித்து வருகின்றனர். நெரிசலில் இருந்து மீள மெட்ரோ ரயில் அவசியமாகிறது. விரைவில் இத்திட்டம் நிறைவேற்றுவதற்கான பணிகளை மாநில அரசு வேகப்படுத்தி இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரசுக்கு பாராட்டுகள்’’ என்றனர். மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறும்போது, ‘‘மதுரைக்கு மெட்ரோ ரயில் சாத்தியக்கூறு அறிக்கை வழங்கப்பட்ட நிலையில், மாநில அரசின் அறிவிப்பு விரைவில் மதுரை வரும் தென்தமிழக மக்களுக்கு விரைந்த நிம்மதியான பயணத்தை அளிக்கும்’’ என்றார். …

The post தூங்காநகரின் நெடுநாள் நெரிசலுக்கு வந்தாச்சு தீர்வு மெட்ரோ ரயில் திட்டம் ரெடி… ஜூட் appeared first on Dinakaran.

Tags : Dumanganagar ,Jude ,IAS Officer Group ,Madurai ,
× RELATED ஓட்டு கேட்க போன இடத்தில் ‘கும்மாங்குத்து’ பாஜ வேட்பாளர் ‘ஜூட்’