×

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.9,839க்கு ஏலம்

குத்தாலம் : மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 5600 குவிண்டால் பருத்தியை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். குவிண்டால் அதிகபட்சமாக ரூ.9839க்கு விற்பனையானது.மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 4961 ஹெக்டேரில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். மாவட்டத்தில் முன்கூட்டியே பருத்தி சாகுபடி செய்திருந்த விவசாயிகளின் பருத்திகள் வெடித்து விற்பனைக்கு தயாரானதால், முன்கூட்டியே விற்பனை கூடங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் திறக்கப்பட்டன.டெல்டா மாவட்டங்களிலேயே முதல்முறையாக தேசிய வேளாண் மின்னணு சந்தைத் திட்டத்தின்கீழ் (இ-நாம்) முறையில் மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது. குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாகை விற்பனைக்குழுச் செயலாளர் ரமேஷ் முன்னிலையில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் 1900 விவசாயிகள் கலந்து கொண்டனர். கும்பகோணம், செம்பனார்கோவில், பண்ருட்டி, திருப்பூர், குத்தாலம் ஆக்கூர்முக்கூட்டு, தேனி, கொங்கணாபுரம் போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பங்கேற்று 5600 குவிண்டால் பருத்தியை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்தனர். அதிகபட்சமாக குவிண்டால் 1க்கு ரூ.9839க்கும், குறைந்தபட்சமாக ரூ.8819க்கும் சராசரியாக 9615 ஏலம் எடுத்தனர். கடந்த மறைமுக ஏலத்தில் பருத்தி அதிகபட்சமாக ரூ.12169க்கு ஏலம் போன நிலையில், இந்த முறை நடந்த மறைமுக ஏலத்தில் கூடுதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்….

The post குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.9,839க்கு ஏலம் appeared first on Dinakaran.

Tags : Guthalam Regulatory Saleshall Guthalam ,Guthalam Regulatory Sale Hall ,Mayiladudura District ,Cotton ,Guthalam Regulatory Saleshall ,Dinakaraan ,
× RELATED கொள்ளிடம் பகுதியில் வரலாறு காணாத அளவில் சுட்டெரிக்கும் வெயில்