சென்னை: தமிழ் சினிமாவில் ரெடிமேட் பாடல்கள் என்ற புதிய கலாசாரம் பரவி வருகிறது. வழக்கமாக படத்துக்கு பாடல்கள் உருவாக்க, இசையமைப்பாளர் டியூன் அமைத்து தருவார். அதற்கு ஏற்ப பாடல் வரிகளை பாடலாசிரியர் எழுதுவார். சில சமயம், பாடல் வரிகளுக்கு ஏற்பக் கூட இசையமைப்பாளர் டியூன் அமைப்பார். இப்போது தமிழ் சினிமாவில் பாடல் வரிகளை ஏற்கனவே உருவாக்கி, அதை பல படங்களுக்கு வழங்கும் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளனர். பாடல்கள் ரெடிமேடாக கிடைக்கும் முறை இது.
அந்த வரிகளை வைத்துக்கொண்டு இசையமைப்பாளர் டியூன் அமைப்பார். இதுபோல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை உருவாக்கியிருக்கிறார் பாடலாசிரியர் ஏ. இரமணிகாந்தன். அதில் பல வகை உணர்வுகளை வெளிப்படுத்தும் பாடல்கள் இடம்பெற்றுளன. அதை புதிய படங்களுக்கு அவர் வழங்கி விடுகிறார். இதன் மூலம் அவர் சினிமா உலகில் பிரபலமாகி வருகிறார். கழுமரம், ைலசென்ஸ் உள்பட பல படங்களுக்கு அவர் பாடல்களை வழங்கியுள்ளார்.
The post தமிழ் சினிமாவை கலக்கும் ரெடிமேட் பாடல்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.