
சென்னை: ஒளிப்பதிவாளராக இருந்து நடிகர் ஆனவர், நட்டி என்கிற நட்ராஜ் சுப்பிரமணியம். வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடிக்கும் அவர், முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கும் படம், ‘ஆண்டவன் அவதாரம்’. இதற்குமுன் ‘நஞ்சுபுரம்’, ‘அழகு குட்டி செல்லம்’, ‘சாலை’ ஆகிய படங்களை இயக்கியுள்ள சார்லஸ், தனது லைட் சவுண்ட் அன்ட் மேஜிக் நிறுவனத்துக் காக ‘ஆண்டவன் அவதாரம்’ என்ற படத்தை தயாரித்து எழுதி இயக்குகிறார். முக்கிய வேடத்தில் ராகவ் நடிக்கிறார்.
ஜி.பாலமுருகன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பு பொறுப்பு ஏற்கிறார். நவ்னீத், ராகவ் இசை அமைக்கின்றனர். சார்லஸ் கூறுகையில், ‘இப்படத்துக்கு ‘அவதாரம்’ என்று பெயரிட நினைத்தேன். அந்த டைட்டில் நாசரிடம் இருப்பதால், ‘ஆண்டவன் அவதாரம்’ என்று பெயரிட்டேன். நட்டி இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இது தந்தை-மகன், அண் ணன்-தம்பி வேடமாக இருக்காது. சயின்ஸ் பிக்ஷன் என்றாலும், நிகழ்காலத்தில் நடக்கக்கூடிய விஷயங்களை வைத்து படமாக்குகிறோம்’ என்றார்.
The post சயின்ஸ் பிக்ஷன் படத்தில் இரட்டை வேடங்களில் நட்டி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.
