×

மியான்மரில் கொல்லப்பட்ட தமிழக வாலிபர்கள் உடல்களை கொண்டு வர வலியுறுத்தி உறவினர்கள் பேரணி: செங்குன்றத்தில் பரபரப்பு

சென்னை: மியான்மரில் சுட்டுக் கொல்லப்பட்ட வாலிபர்களின் உடல்களை தமிழகத்துக்கு கொண்டு வர வலியுறுத்தி, அவர்களுடைய உறவினர்கள் பேரணி நடத்தினர். மணிப்பூர் மாநிலத்தில், மோரெக் என்ற நகரம் மியான்மார் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. மோரெக் நகரில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த மோகன்(28), அய்யனார்(35) ஆகியோர் அங்கு வசித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இந்தியா-மியான்மர் எல்லையில் தமு என்ற இடத்தில் மோகன், அய்யனார் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த  அய்யனாருடைய ஊர் செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சி ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகரில் உள்ளது. அவருடைய உறவினர்கள் இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என, ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி பாலமுருகன் நகர் பகுதியிலிருந்து செங்குன்றம் காவல் நிலையம் நோக்கி அமைதி பேரணி நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்த செங்குன்றம் காவல்துறையினர் பாடியநல்லூர் சிக்னல் அருகே, அவர்களை தடுத்து நிறுத்தி உங்களுடைய நியாயமான கோரிக்கைகளை கலெக்டர் இடம் கொடுங்கள் என்று சொல்லி அவர்களை திருப்பி அனுப்பினார்கள். …

The post மியான்மரில் கொல்லப்பட்ட தமிழக வாலிபர்கள் உடல்களை கொண்டு வர வலியுறுத்தி உறவினர்கள் பேரணி: செங்குன்றத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Myanmar ,Sringkulam ,Chennai ,Manipur ,Relatives ,Brenkulam ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...