×

நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தெங்குமரஹாடா மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: பரிசலில் ஆற்றை கடக்கும் மக்கள்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தெங்குமரஹாடா மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக தெங்குமரஹாடா மாயாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அப்பகுதி வழியே ஜீப், மினிவேன் போன்ற வாகனங்கள் ஆற்றை கடப்பது பெரும் சவாலாகியுள்ளது.மேலும் தெங்குமரஹாடாவில் வசிக்கும் மக்கள் தங்கள் அன்றாட தேவைகள் மற்றும் வேலைகளுக்காக வெள்ளபெருக்கின் மத்தியில் பரிசலில் ஆபத்தான முறையில் பயணத்தை மேற்கொள்கின்றனர். பரிசலில் மாயாற்றை கடந்து பேருந்தை பிடித்து பவானிசாகர் மாற்று சத்தியமங்கலம் சென்று வருகின்றனர். கல்லம்பாளையம் மாயாற்றில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென்பதே அல்லிமாயார், சித்திரம்பட்டி, புதுகாடு சுற்றுவட்டார மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதனிடையே தொடர் மழையால் கடந்த 3 நாட்களில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.கடந்த 5-ம் தேதி அணையின் நீர்மட்டம் 83.25 அடியாக இருந்த நிலையில் இன்று 85.35 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 7,679 கனஅடியாக உள்ளது….

The post நீலகிரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தெங்குமரஹாடா மாயாற்றில் வெள்ளப்பெருக்கு: பரிசலில் ஆற்றை கடக்கும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,Tengumarahada ,Parisal ,Nilgiris ,Nilgiris district ,Nilgiri ,Dinakaran ,
× RELATED கண்காட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் அகற்றம்