×

நாட்டேரி அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி செல்லபிராணிகள் கடித்தால் தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம்-டாக்டர் அறிவுறுத்தல்

செய்யாறு : நாய், பூனை போன்ற செல்ல பிராணிகள் கடித்தால் கட்டாயம் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என நாட்டேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.செய்யாறு அடுத்த நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய் தடுப்பு தின உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நாட்டேரி அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு டாக்டர் யோகேஸ்வரன் தலைமை தாங்கினார்.  தலைமை ஆசிரியர் மகிழரசன் வரவேற்றார். சுகாதார ஆய்வாளர் கே.சம்பத் முன்னிலை விகித்தார். இதில், டாக்டர் யோகேஸ்வரன் ேபசுகையில், `எலி, நாய், பூனை, குரங்கு மற்றும் பிற விலங்குகளின் சிறுநீர் கலந்த நீர்நிலைகளில் குளிப்பது மற்றும் நடப்பதை தவிர்ப்பதன் மூலம் லெப்டோஸ்பைரோசிஸ் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம். கொசுக்களால் பரவும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தொற்றில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க கொசு வலை மற்றும் கொசு விரட்டிகளை பயன்படுத்த வேண்டும்.நாய், பூனை போன்ற செல்ல பிராணிகள் கடிக்கும்போது உடனடியாக தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும். வீட்டிலும் மற்றும் சுற்றுப்புறத்திலும் வளர்க்கப்படும் கால்நடைகள் மற்றும் பிற விலங்குகளின் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.தொடர்ந்து, விலங்குகளின் சிறுநீரால் நீர்நிலைகள் மாசு அடைவதை தடுக்க வேண்டும். விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நோய் கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சுகாதார பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர். முடிவில் ஆசிரியர் பிரபு நன்றி கூறினார். …

The post நாட்டேரி அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி செல்லபிராணிகள் கடித்தால் தடுப்பூசி எடுத்துக் கொள்வது அவசியம்-டாக்டர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Nateri Govt School ,Seiyaru ,Nateri ,Nateri Government School ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து