×

5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை பணியாளர்கள் போராட்டம்

திருவள்ளூர்: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் சம்பத், மாவட்ட இணை செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணை செயலாளர் காளியப்பன், மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். நெடுஞ்சாலைத்துறையில் அரசாணைப்படி நெடுஞ்சாலை துறையில் அரசாணையை அமல்படுத்தப்பட்டு சாலை ஆய்வாளர்கள் பணி இடத்தை திறன்மிகு உதவியாளர் என பெயர் மாற்றம் செய்ததைப் போல், சாலை பணியாளர் பணியிடத்தை திறன்மிகு இல்லா பணியாளர் என பெயர் மாற்றம் செய்து அதற்குரிய ஊதியம் தர வேண்டும், சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி ஓய்வுக்கு பின் பணி கொடைக்கும் ஓய்வூதிய பலன்களுக்கும் பொருந்தக் கூடிய வகையில் அரசாணை வெளியிட வேண்டும், நெடுஞ்சாலைகளில் விரிவாக்கம் சாலைகளின் அகலம் நீளத்திற்கு ஏற்ப வாகன நெரிசல்கள் கனரக வாகன போக்குவரத்தின் அடிப்படையில் சாலைகளை பராமரிக்க 5 கி.மீ. 2 நபர்கள் என்ற சாலை பணியாளர்கள் என பணியிட ஒப்புதல் வழங்க வேண்டும், தமிழக நெடுஞ்சாலை துறையில் உள்ள மாநில சாலைகள், மாவட்ட சாலைகள், மாவட்டத் இதர சாலைகள் முறையிலும் திட்டத்தின் மூலம் தனியார் பராமரிப்புக்கு வழங்கப்படுவதை கைவிட வேண்டும். 7- 9 -2002 முதல் 12-2- 2006 வரை உள்ள பணி நீக்க காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் விதிமுறைகளை தளர்த்தி பணி நியமனம் வழங்க வேண்டும் ஆகிய 5 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். முடிவில் மாவட்ட பொருளாளர் பாலாஜி நன்றி கூறினார்….

The post 5 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை பணியாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Tamil Nadu Highway Department Road Maintenance Staff Association ,Divisional Engineer's Office ,Highways Department ,
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...