×

ஒதப்பை கிராமத்தில் ரூ.22.50 கோடியில் விறுவிறுப்பாக நடைபெறும் உயர்மட்ட பால பணிகள்: விரைவில் திறக்க ஏற்பாடு

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை பகுதியில் உள்ள கொசஸ்தலை ஆற்றில் ரூ.22.50 கோடி மதிப்பில் இரண்டு உயர் மட்ட பால பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முடிந்து விரைவில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2015ம் வருடம் மற்றும் 2021ம் வருடங்களில் நவம்பர், டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் பூண்டி நீர்தேக்கம் நிரம்பியது. இதனால் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், ஊத்துக்கோட்டை – திருவள்ளூர் சாலையில் உள்ள ஒதப்பை கிராமத்தின் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உள்ள ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. அப்போது, பாலம் விரிசல் ஏற்பட்டது. இதனால், கனரக வாகனங்கள் உள்ளிட்ட போக்குவரத்து ஒரு மாதத்திற்கு நிறுத்தப்பட்டது.மேலும், ஒதப்பை பாலம் சேதத்தால் பல்வேறு பணிகளுக்காக மாவட்ட தலைநகரான திருவள்ளூர் செல்ல முடியாமல் சீத்தஞ்சேரி, மயிலாப்பூர், தேவந்தவாக்கம், பென்னலூர்பேட்டை, பெருஞ்சேரி அனந்தேரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், மழை பெய்து கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் வந்தால் மட்டும் சீத்தஞ்சேரி வனப்பகுதி வழியாக வெங்கல், தாமரைப்பாக்கம் கூட்டுசாலை வழியாக சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு திருவள்ளூர் மாவட்டம் சென்று வரும் அவல நிலைய ஏற்பட்டது. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே, விரைவில் ஒதப்பை பாலத்தில் மேம்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.இந்நிலையில், அதன்படி கடந்த 2019ம் வருடம் ரூ.12 கோடி செலவில் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி 50 சதவீதம் நடைபெற்று வருகிறது. அதேப்போல், 2020ம் ஆண்டு ரூ.10.50 கோடி செலவில் கட்டப்படவுள்ள பாலம் கடந்த மாதம் தொடங்கியது. அதன்படி தற்போது இந்த இரண்டு பாலப்பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் இந்த பாலப்பணி விரைவில் முடிந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த இரண்டு பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 2019ம் வருடம் ரூ.12 கோடி செலவில் பாலம் கட்டுமான பணிகள் தொடங்கி 50  சதவீதம் நடைபெற்று வருகிறது. அதேப்போல், 2020ம் ஆண்டு ரூ.10.50 கோடி செலவில்  கட்டப்படவுள்ள பாலம் கடந்த மாதம் தொடங்கியது….

The post ஒதப்பை கிராமத்தில் ரூ.22.50 கோடியில் விறுவிறுப்பாக நடைபெறும் உயர்மட்ட பால பணிகள்: விரைவில் திறக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Othabai Village ,Poothukkotta ,Kosastalai River ,Othaba ,Puttukotta ,
× RELATED செங்கரை காட்டுச்செல்லி அம்மன்...