×

வியாசர்பாடியில் 800 ஆண்டு பழமை வாய்ந்த இரவீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில்  800 ஆண்டு பழமை வாய்ந்த இரவீஸ்வரர் கோயில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் கடந்த 26ம்தேதி காலை கொடியேற்றத்துடன்  பிரமோற்சவ விழா துவங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு உற்சவங்கள் நடைபெற்றன. பிரமோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா கடந்த 2ம்தேதி வெகுவிமரிசையாக நடந்தது. கோயிலில் இருந்து தேரை வடம் பிடித்து இழுத்து ஓம் நமச்சிவாய என பக்தர்கள் முழக்கமிட்டபடி சென்றனர். இந்நிலையில் நேற்று காலை  நடராஜர் தரிசனமும், தீர்த்த வாரியும்  நடைபெற்றது. இரவு 8 மணிக்கு திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்திகளின் உற்சவமும் வெகுவிமரிசையாக நடைபெற்றது.  விழாவில், வியாசர்பாடி மட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில், கோயில் உபயதாரர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்….

The post வியாசர்பாடியில் 800 ஆண்டு பழமை வாய்ந்த இரவீஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Tags : Thirukalyanam ,Ravieswarar Temple ,Vyasarbadi ,Perampur ,Vyasarbati Murthingar Street ,Navieswarar ,Temple ,
× RELATED உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி –...