×

வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை

கோவை: கோவை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் தொடர்ச்சியாக மழைபெய்து வருவதால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. கடந்த சில தினங்களாக கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதேபோல சிறுவாணி அணையில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக, இன்று முதல் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோவை குற்றாலம் செல்லக்கூடிய வழியும் மூடப்பட்டது. மறுஅறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் யாரும் உள்ளே செல்லக்கூடாது என வனத்துறையினர் தெரிவித்தனர். மக்களின் பாதுகாப்பு கருதி, கோவை குற்றாலம் அருவி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரங்களில் கனமழை பெய்து வருவதால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதோடு, பாறைகளும் உருண்டு வருவதற்கான வாய்ப்புள்ளது. இதன் காரணமாகாவே கோவை குற்றாலம், தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மறுஅறிவிப்பு வரும் வரை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் செல்ல வேண்டாம் என தடைவிதிக்கப்பட்டதோடு, அங்கு அறிவிப்பு பலகையும் வனத்துறை சார்பாக வைங்கப்பட்டுள்ளது….

The post வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் அருவிக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Kudalam Fall ,Cov ,Govai ,Govai Kuttalam ,Goi Guilty Fall ,Dinakaran ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!