×

பணிமாறுதல் கிடைத்தாலும் கவலையில்லை..: எந்த அச்சுறுத்தலுக்கும் அடிப்பணிய மாட்டேன்.: கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சந்தேஷ் பேட்டியால் பரபரப்பு

கர்நாடக: ஊழல் வழக்கை விசாரித்தற்காக பணிமாறுதல் கிடைத்தாலும் கவலையில்லை என கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சந்தேஷ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூர் நகர்ப்புற மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையின் போது நில தகராறு தொடர்பாக சாதகமான தீர்ப்பை வழங்குவதற்காக மாவட்ட ஆணைய நீதிமன்றம் ஒப்பந்த ஊழியர் சேத்தன் மற்றும் உதவி தாசில்தார் மகேஷ் ஆகியோர் 5 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், மாவட்ட ஆணையர் மஞ்சுநாத் கேட்டுக்கொண்டதால் தாங்கள் அவருக்காக லஞ்சம் வாங்கியதாக இருவரும் கூறியிருந்தனர். இதுதொடர்பாக மஞ்சுநாத் மீது விசாரணை நடைபெறாததை கண்டித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்தேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை லஞ்சத்தில் ஊறிப்போயுள்ளதாகவும் லஞ்சம் வாங்கும் சிறப்பு மையமாக செயல்படுவதாகவும் கூறியவர் இதற்கு தலைவராக கறைபடிந்த நபர் இருப்பது அதைவிட வெட்கக்கேடானது என்று காட்டமாக கூறி இருந்தார். இந்தநிலையில், அரசு அதிகாரிகளுக்கு எதிரான கர்நாடக மாநில லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு விசாரணையின் போது நீதிபதி சந்தேஷ் பேட்டி அளித்தார். அதாவது, லஞ்ச ஒழிப்புத் துறை குறித்தும், அதன் தலைவர் குறித்தும் தான் கூறிய கருத்துக்காக தன்னை இடமாறுதல் செய்யப்போவதாக சக நீதிபதி என்னிடம் கூறினார். அதிகாரிகளுக்கு எதிராக கருத்து கூறியதால் எனக்கு பணிமாறுதல் தண்டனையாக கிடைக்கும். எந்த அச்சுறுத்தலுக்கும் அடிப்பணிய மாட்டேன், அரசியல் சாசனத்தை பாதுகாப்பதே என் கடமை என நீதிபதி சந்தேஷ் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

The post பணிமாறுதல் கிடைத்தாலும் கவலையில்லை..: எந்த அச்சுறுத்தலுக்கும் அடிப்பணிய மாட்டேன்.: கர்நாடக ஐகோர்ட் நீதிபதி சந்தேஷ் பேட்டியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka ,iCourt ,Judge ,Sandesh Pati ,Sandesh ,
× RELATED கர்நாடக முன்னாள் முதலமைச்சர்...