×

டென்மார்க்கில் பயங்கரம்..கண்ணிமைக்கும் நேரத்தில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு.. 3 பேர் பலி!!

டென்மார்க்: டென்மார்க்கில் வணிக வளாகம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன் நகரில் விமான நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்ட வேளையில் திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. வணிக வளாகத்திற்கு வந்த இருவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வணிக வளாகத்தில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். முழு நேர கடுமையான போராட்டத்திற்கு பிறகு துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் பிடிபட்டார்.இந்த துப்பாக்கிச் சூட்டில் வணிக வளாகத்தில் இருந்த 3 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர். உயிரிழப்பு, காயம் அடைந்தோர் பற்றிய முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை.22 வயது நிரம்பிய இளைஞர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணம் என்ன , பயங்கரவாத தொடர்பு இருப்பதா என்பது பற்றி டென்மார்க் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். …

The post டென்மார்க்கில் பயங்கரம்..கண்ணிமைக்கும் நேரத்தில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு.. 3 பேர் பலி!! appeared first on Dinakaran.

Tags : Denmark ,Dinakaran ,
× RELATED டென்மார்க் நாட்டில் விமானத்தின்...