- முதல் அமைச்சர்
- எம்.கே.
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டென்மார்க்
- இந்தியா
- ஸ்டாலின்
- சென்னை
- மு.கே ஸ்டாலின்
- அக்கு பாண்டிய ராஜா
- ஸ்க்ராபிஃபை ஈகோடெக்
- கோபன்ஹேகன், டென்மார்க்
- தமிழ்நாடு தொழில்நுட்ப மையம்
- மு.கே ஸ்டாலின்
- தின மலர்
சென்னை: டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெறும் “அடுத்த தலைமுறை டிஜிட்டல் செயல் திட்டம் 2024”ல் இந்தியாவின் பிரதிநிதியாகச் செல்லும் தமிழ்நாட்டை சேர்ந்த புத்தொழில் நிறுவனமான ஸ்கிராப்பிஃபை எக்கோடெக் நிறுவனத்தின் நிறுவனர் அழகு பாண்டிய ராஜாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார். தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தினால் (iTNT Hub) ஆதரவளிக்கப்பட்டுவரும் இந்த புத்தொழில் நிறுவனம், 2,000 விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய 18 நிறுவனங்களில், இந்தியாவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இரண்டு நிறுவனங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து, ஸ்கிராப்பிஃபை எக்கோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் அழகு பாண்டிய ராஜா, தங்கள் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட எக்கோஃபுளோட்டர் (Eco-Floater) என்னும் நீர்நிலைகளை தூய்மை செய்யும் ஒரு புதுமையான நீர் டிரோன் இயந்திரம் செயலாற்றும் விதத்தை தமிழ்நாடு முதல்வரிடம் எடுத்துரைத்தார். அக்டோபர் 28 முதல் நவம்பர் 2, 2024 வரை டென்மார்க்கின் கோபன்ஹேகனில் நடைபெறும் டிஜிட்டல் தொழில்நுட்ப உச்சி மாநாடு 2024ன் உலகளாவிய இளைஞர் முயற்சியின் ஒரு பகுதியான “அடுத்த தலைமுறை டிஜிட்டல் நடவடிக்கை” நிகழ்ச்சியில் எக்கோஃபுளோட்டர் செயல்பாடுகள் குறித்து விளக்கப்படும்.
ஸ்கிராப்பிஃபை எக்கோடெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் அழகு பாண்டிய ராஜா, தமிழ்நாடு அரசு அளித்த அங்கீகாரமும் ஊக்கமும் நாங்கள் உயர்ந்த நிலைக்கு வருவதற்கான மன உறுதியை அளித்துள்ளது என்றும், எங்களுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கியதற்காக அரசிற்கும், தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்திற்கும் நன்றி என தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் செயலாளர் குமார் ஜெயந்த், தமிழ்நாடு தொழில்நுட்ப மையத்தின் தலைமை செயல் அலுவலர் வனிதா வேணுகோபால் ஆகியோர் உடனிருந்தனர்.
The post இந்தியாவின் பிரதிநிதியாக டென்மார்க் செல்லும் தமிழ்நாடு புத்தொழில் நிறுவனருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு appeared first on Dinakaran.