×

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தேரோட்டம்

திருச்சி: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பஞ்சபூதங்களில் நீர்தலமாக விளங்குவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயில். இங்கு ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் மண்டல பிரம்மோற்சவ விழா 48 நாட்கள் கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான மண்டல பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 14ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 21ம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. பிரியாவிடை அம்மன் சமேத ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி அம்மன் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். சிறப்பு பூஜையுடன் காலை 6.50 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகள் வழியாக வலம் வந்து நிலையை அடைந்தது. நாளை(6ம் தேதி) சுவாமி, அம்மன் வெள்ளி மஞ்சத்திலும், 7ம் தேதி வெள்ளிகுதிரை வாகனத்திலும், பல்லக்கிலும், 8ம்தேதி நந்தி வாகனத்திலும், சேஷ வாகனத்திலும், 9ம்தேதி சுவாமி, அம்மன் ஏக சிம்மாசனத்தில் வீதி உலா வருகின்றனர். பங்குனி தேர்த்திருவிழா 9ம் தேதியுடன் நிறைவடைகிறது.

Tags : Ahilandeswari ,
× RELATED அருள்மழை பொழியும் அகிலாண்டேஸ்வரி