×

சக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

கும்பகோணம்: பங்குனி ஏகாதசியை முன்னிட்டு கும்பகோணம் சக்கரபாணி பெருமாள் கோயிலில் சுதர்சனவல்லி தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. கும்பகோணத்தில் சக்கரபாணி சுவாமி பெருமாள் கோயில் உள்ளது. சூரிய பகவான் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதால் கும்பகோணத்துக்கு பாஸ்கர ஷேத்திரம் என்ற காரண பெயரும், தல பெருமையும் பெற்ற சிறப்புடையது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் தாயாருக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்து வருவது வழக்கம். அதன்படி நேற்று ஏகாதசி, சிரவணம் சேர்ந்து இருந்த நாளில் சுதர்சனவல்லி தாயார் சமேத சக்கரபாணி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதையொட்டி மாலை மாற்றல், சிறப்பு ஹோமம், நலுங்கு, ஊஞ்சல் உற்சவத்துடன் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (1ம் தேதி) இரவு 7 மணியளவில் பெருமாள் தாயார் வீதியுலா புறப்பாடு நடக்கிறது.

Tags : Thirukkalai ,festival ,
× RELATED பொற்ெகாடியம்மன் திருவிழாவுக்கு 25...