×

புழுதி பறந்த சாலை ஒரேநாளில் தார்ச்சாலையாக மாறியது வாகன ஓட்டிகள் நிம்மதி

அலங்காநல்லூர் : அலங்காநல்லூர் அருகே புழுதி பறந்த சாலை தினகரன் செய்தி எதிரொலியாக ஒரேநாளில் தார்ச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் கேட்டுக்கடை முதல் தனிச்சியம் பிரிவு வரை பிரதான சாலையை விரிவுபடுத்தி ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.10 கோடி மதிப்பிலான சாலை விரிவாக்க பணிக்கு டெண்டர் விடுவிக்கப்பட்டது.தனிச்சியம் பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பெயரளவிற்கு சாலையை விரிவுபடுத்தி விரிவாக்கப் பணி நடைபெற்று வந்தது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது இந்தப் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது ஆங்காங்கே விடுபட்ட பகுதிகளில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணியை மீண்டும் விரிவாக்கம் செய்வதற்கு ஒப்பந்தக்காரர்கள் பணியை துவங்கினர். ஆனால் தொடங்கிய பணியை விரைந்து முடிக்காமல் கிடப்பில் போட்டு நெடுஞ்சாலை துறை நிர்வாகம் மெத்தனமாக இருந்தது. இந்த சாலையில் கொட்டப்பட்டுள்ள ஜல்லி கற்கள், கிரஷர் தூசியில் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் விபத்து அபாயத்தில் பயணிக்கும் அவலநிலை இருந்தது.மேலும் அலங்காநல்லூர் கேட்டுக்கடை பேருந்து நிலைய பகுதியில் சாலையை ஆக்கிரமித்து உள்ள வியாபார நிறுவனங்களால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே விரைவாக சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றி விரிவாக்கப் பணியை முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் நெடுஞ்சாலைத் துறைக்கு கோரிக்கை விடுத்தனர். மேலும் சாலை அமைக்கும் பணி முடியும் வரை தூசி பறக்காமல் இருப்பதற்கு தண்ணீர் தெளிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இது தொடர்பாக கடந்த ஜூன் 28ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் தினகரன் செய்தி எதிரொலி காரணமாக விரைந்து சாலை பணியை நெடுஞ்சாலை துறை நிர்வாகம் முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது….

The post புழுதி பறந்த சாலை ஒரேநாளில் தார்ச்சாலையாக மாறியது வாகன ஓட்டிகள் நிம்மதி appeared first on Dinakaran.

Tags : Alanganallur ,Fluthi ,Tarsala ,Dinakaran ,Katikuddai ,Fluff Fly Road ,
× RELATED வேளாண் மாணவிகள் சார்பில் கொய்யா...