×

பிரதமர் மோடியை புறக்கணித்த தெலுங்கானா முதல்வர் கேசிஆர்.. யஷ்வந்த் சின்ஹாவை ஓடிப்போய் வரவேற்றார்!!

ஹைதராபாத் : ஹைதராபாத் நகரில் நடைபெறும் பாஜக தேசிய நிர்வாகக்குழு கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த பிரதமர் மோடிக்கு தெலங்கானா அரசு சார்பில் அம்மாநில அமைச்சர் ஒருவர் மட்டுமே சென்று வரவேற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத் நகரில் நடைபெறும் பாஜக தேசிய நிர்வாகிகள் குழு கூட்டம் இன்றும் நாளையும் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று ஹைதராபாத் வருகை தந்தார். அவரை தெலுங்கானா முதல்வர் கே.சி.சந்திரசேகர ராவ் நேரில் சென்று வரவேற்கவில்லை. மேலும் தெலங்கானா அரசு சார்பில் அமைச்சர் ஒருவர் மட்டுமே சென்று பிரதமர் மோடியை வரவேற்றார். ஆனால் குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் களம் இறக்கப்பட்டு இருக்கும் யஷ்வந்த் சின்கா ஆதரவு திரட்டுவதற்காக ஹைதராபாத் சென்றார். அவரை முதலமைச்சர் சந்திர சேகர ராவ் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் அனைவரும் சென்று வரவேற்றனர். இந்த நிகழ்வு தெலங்கானா அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. …

The post பிரதமர் மோடியை புறக்கணித்த தெலுங்கானா முதல்வர் கேசிஆர்.. யஷ்வந்த் சின்ஹாவை ஓடிப்போய் வரவேற்றார்!! appeared first on Dinakaran.

Tags : Telangana ,Chief Minister ,KCR ,Modi ,Yashwant Sinha ,Hyderabad ,BJP ,National Executive Committee ,
× RELATED தெலங்கானா துணை முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்