×

அரிமளம் முத்துமாரியம்மன் கோயிலில் தேர்திருவிழா

திருமயம்: அரிமளத்தில் கோயில் திருவிழாவையொட்டி நடைபெற்ற தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம்  அரிமளம் முத்துமாரி  அம்மன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்திபெற்ற கோயிலாகும். இக்கோயில் பங்குனி திருவிழா கடந்த  15ம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் 17ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் முதல்நாள் திருவிழா தொடங்கியது. இதனை  தொடர்ந்து தினம் தோறும் பல்வேறு சமுதாயத்தினரின் மண்டகப்படியும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சிகள்நடைபெற்றது.

விழாவையொட்டி ஒவ்வொரு நாள் இரவும் பாட்டுக் கச்சேரிகள், கிராமிய கலை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் காலை, இரவு நேரங்களில் தினந்தோறும் அம்மன் வீதி உலா, வான வேடிக்கைகள் நடந்தது. இதனிடையே விழாவின் ஒரு பகுதியாக விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்று நேர்த்திகடன் செலுத்தினர்.

தேரானது அம்மன் கோயில் வாசலில் இருந்து புறப்பட்டு அரிமளம் கடை வீதி, மீனாட்சிபுரம் வீதி, அக்ரஹாரம் வீதி  வழியாக வந்து பின் கோயிலை அடைந்தது. விழாவில் அரிமளம்,சத்திரம், பாலையூர், ஒத்தபுளிகுடியிறுப்பு, ராயவரம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து  திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் கடைசி நாளான இன்று(26ம் தேதி) காலை பால்குடம் காவடி எடுப்பு  நிகழ்ச்சிகள்
நடைபெற உள்ளது.

Tags : Elections ,Arimalai Muthuramaniamman Temple ,
× RELATED 2024 மக்களவை தேர்தலில் பதிவானதைவிட...