×

புனித தோமையர் மலை தெற்கு ஒன்றிய திமுக பிரமுகர் இல்ல திருமண உறுதியேற்பு விழா

வேளச்சேரி: புனித தோமையர் மலை தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் மேடவாக்கம் ப.ரவியின் மகள் திருமண உறுதியேற்பு விழா நேற்று மாலை மாமல்லபுரம், இசிஆர் சாலையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா உள்பட பலர், மணமக்களை வாழ்த்தினர். புனித தோமையார் மலை தெற்கு ஒன்றிய திமுக செயலாளரும் மேடவாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சிலருமான மேடவாக்கம் ப.ரவி-ஊராட்சி மன்ற தலைவர் சிவபூஷணம் ரவி ஆகியோரின் மகள் டாக்டர் ஆர்.நர்மதா, தாம்பரம் துணை மேயர் ஜி.காமராஜ்-திருநீர்மலை பேரூராட்சி முன்னாள் தலைவர் கலைவாணி தம்பதியின் மகன் டாக்டர் ஜி.கே.அரவிந்த்ராஜ் ஆகியோரின் திருமண உறுதியேற்பு விழா நேற்று மாலை மாமல்லபுரம், இசிஆர் சாலை, பூஞ்சேரி கூட் சாலையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட்டில் நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா, கலைஞர் மகள் செல்வி, ஆ.ராசா எம்பி, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், ரகுபதி, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி, எம்எல்ஏக்கள் க.சுந்தர், எஸ்.ஆர்.ராஜா, அரவிந்த் ரமேஷ், வெ.கருணாநிதி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, திருப்போரூர் ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், புனித தோமையார் மலை ஒன்றிய குழு தலைவர் சங்கீதா பாரதிராஜன் உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வாழ்த்தினர். தனது மகளின் திருமண உறுதியேற்பு விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் ஒன்றிய செயலாளர் மேடவாக்கம் ப.ரவி, அவரது மனைவியும் மேடவாக்கம் ஊராட்சி மன்ற தலைவருமான சிவபூஷணம் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்….

The post புனித தோமையர் மலை தெற்கு ஒன்றிய திமுக பிரமுகர் இல்ல திருமண உறுதியேற்பு விழா appeared first on Dinakaran.

Tags : Sacred ,Domiar Mountain South Union ,Dizhagagar Primarital Solemnity ceremony ,Saint Domir Mountain South Union ,Madavakkam P. Rawi ,Saint Domiar Mountain South Union ,Dazhagagararararar Home Wedding Convinction Festival ,Dinakaran ,
× RELATED மார்த்தாண்டம் சேக்ரட் ஹார்ட் பள்ளியில் விளையாட்டு தின விழா