நெல்லை: அதிமுக ஆட்சி காலத்தில் காலாவதியான தேவையற்ற மருந்துகள் மற்றும் மருத்துவ கருவிகள் வழங்கப்பட்டதாக தமிழ்நாடு சட்டமன்ற பொதுக்கணக்கு குழு குற்றம் சாட்டியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக சட்டமன்ற பொதுக்கணக்கு குழு ஆய்வு செய்து வருகிறது. அந்த வகையில் நெல்லையில் குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். நெல்லை வீரமாக்கினிபுரத்தில் சமூக நலத்துறை சார்பில் செயல்படும். பணிபுரியும் மகளிருக்கான விடுதி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனை, ஆதிதிராவிடர் பள்ளி மாணவி விடுதி, மற்றும் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வரும் நேருஜி கலையரங்கம் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர்ஸ் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை; நெல்லை மாவட்டத்தில் 4.29 கோடி செலவில் வாங்கப்பட்ட மருத்துவ கருவிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறினார். இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். …
The post அதிமுக ஆட்சியில் வாங்கப்பட்ட காலாவதி மருந்துகள்; ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்: செல்வப்பெருந்தகை appeared first on Dinakaran.
