×

டார்க் காமெடி கதை நிர்வாகம் பொறுப்பல்ல

சென்னை: ‘பேய் இருக்க பயமேன்’ திரைப்படத்தை இயக்கி நடித்த சீ.கார்த்தீஸ்வரன் இயக்கி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’. இவருடன் முக்கிய கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ஆதவன், அகல்யா வெங்கடேசன், நடிதி, ராதாகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர், உண்மை சம்பவங்களின் அடிப்படையில் மக்களை ஏமாற்றி எப்படி எல்லாம் பணம் பறிக்கிறார்கள் என்பதை டார்க் காமெடி வகையில் வெளிச்சம் போட்டுக் காட்டும் படமாக இத்திரைப்படம் உருவாகி இருக்கிறது என்கிறது படக்குழு.

ஆர்கே ட்ரீம் பேக்டரி சார்பில் டி.ராதாகிருஷ்ணன் தயாரிப்பில், கேஎம்பி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.புவனேஸ்வரன் மற்றும் எஸ்பிஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஷாஜு.சி இணைந்து தயாரித்துள்ளனர். காந்த் தேவா இசை. என்.எஸ்.ராஜேஷ்குமார் ஒளிப்பதிவு. அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகிறது.

 

The post டார்க் காமெடி கதை நிர்வாகம் பொறுப்பல்ல appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,C.Kartheeswaran ,Livingston ,Iman Annachi ,Black Bondi ,Aadhavan ,Akalya Venkatesan ,Naditi ,Radhakrishnan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்திய, ஈழத் தமிழர்கள் தயாரிக்கும் ரத்தமாரே