- தாய்லாந்து தீவு
- பாங்காக்
- ஆர்க்கிபெலாகோ சினிமாஸ்
- தாய்லாந்து
- மத்திய தரைக்கடல்
- தாய்லாந்து
- கொலிவுட் செய்திகள்
- கொலிவுட் படங்கள்
பாங்காக்: தாய்லாந்தில் அமைந்துள்ள தியேட்டர் ஆர்கிபெலாகோ சினிமாஸ். இது மிகவும் வித்தியாசமான அனுபவத்தை தரும் தியேட்டராகும். இந்த தியேட்டர் நிலப்பரப்பில் இல்லை. இது நடுக்கடலில் அமைந்துள்ளது. இந்த தியேட்டரில் நைட் ஷோ மட்டும் தான் நடக்கும். நடுக்கடலில் படம் பார்த்தால் எப்படி இருக்கும் என்ற அனுபவத்தை தருவதுதான் இந்த ஆர்கிபெலாகோ சினிமாஸ். தாய்லாந்தில் உள்ள குடு என்கிற தீவில் தான் இந்த விநோதமான திரையரங்கம் அமைந்துள்ளது. கடலுக்கு நடுவே மிதக்கும் ரேப்டில் அமர்ந்து இங்கு படம் பார்க்க முடியும். ஒலி ஷீரென் என்கிற ஜெர்மனியை சேர்ந்த ஆர்கிடெக்ட் தான் இந்த திரையரங்கை வடிவமைத்து உள்ளார்.
தாய்லாந்தில் உள்ள உள்ளூர் வாசிகள் ரேப்டில் மீன் பிடிப்பதை பார்த்து தான் ஏன் கடலில் ரேப்ட் உதவியுடன் தியேட்டர் அமைக்ககூடாது என்கிற யோசனை ஒலி ஷீரெனுக்கு வந்ததாம். கடலை ரசித்தபடி படம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இங்கு பீன்பேக் அமைத்திருக்கிறார்கள். அதில் அமர்ந்தபடி ஜாலியாக படத்தை கண்டு களிக்கலாம். நொறுக்குத்தீனிகள் படகில் வரும்போது அங்குள்ள கடைகளிலிருந்து வாங்கிக் கொண்டு வந்துவிடலாம். வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த தியேட்டரின் அனுபவத்தை பெற வேண்டும் என ரசிகர்கள் சொல்கிறார்கள். அத்துடன் சுற்றுலா பயணிகள் பெரும்பாலும் இந்த தியேட்டருக்கு வந்துவிடுகிறார்கள். அதனால் தினசரி இந்த தியேட்டரில் இரவு காட்சி ஹவுஸ்ஃபுல் ஆகிவிடுகிறது.
The post தாய்லாந்து தீவில் ஒரு புது அனுபவம்; நடுக்கடலில் மிதக்கும் தியேட்டர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.