×

கல்கி 2898 ஏடி 2ம் பாகம் எப்போது?

ஐதராபாத்: நாக் அஸ்வின் இயக்கத்தில் திரைக்கு வந்து வெற்றிபெற்று, ரூ.1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்த பான் இந்தியா படம், ‘கல்கி 2898 ஏடி’. இதில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென், பசுபதி, பிரம்மானந்தம் நடித்தனர். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்த இப்படம், கடந்த வாரம் ஓடிடியில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் 2வது பாகத்தின் கதை கமல்ஹாசனின் கதாபாத்திரத்தை மையமாக வைத்து நகரும் என்று நாக் அஸ்வின் சொன்னார்.

எனவே, 2வது பாகத்துக்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்பனா தத், ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் 2வது பாகத்துக்கான படப்பிடிப்பு வரும் 2025ம் ஆண்டில் தொடங்கப்படும் என்றும், இப்படம் வரும் 2028ம் ஆண்டு திரைக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post கல்கி 2898 ஏடி 2ம் பாகம் எப்போது? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Hyderabad ,India ,Nag Ashwin ,Prabhas ,Amitabh Bachchan ,Kamal Haasan ,Deepika Padukone ,Disha Patani ,Anna Ben ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பொன்னேரியில் உள்ள எஸ்.எஸ். ஐதராபாத் பிரியாணி கடைக்கு சீல் வைப்பு