×
Saravana Stores

செம்பியன் மாதேவி விமர்சனம்

அம்சரேகாவை, உயர்சாதி இளைஞர் லோக பத்மநாபன் காதலிக்கிறார். இதை தங்கள் சமூகத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய களங்கமாக நினைக்கும் சாதி வெறிபிடித்த லோக பத்மநாபனின் உறவுகள், அம்சரேகாவை என்ன செய்கின்றனர்? அதை நேரில் பார்த்து துடிக்கும் லோக பத்மநாபன், என்ன முடிவு செய்தார் என்பது மீதி கதை. உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எழுதி இயக்கி இசை அமைத்து நடித்துள்ள லோக பத்மநாபன், சாதி வெறியின்றி சக மனிதர்களை நேசிக்கும் குணத்தில் உயர்ந்து நிற்கிறார்.

முதல் படம் என்றே சொல்ல முடியாதபடி, கேரக்டரை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளார். காதலிப்பவரை விரட்டுவது, பிறகு அவரைக் கொஞ்சுவது, தன்னை இழந்து தவிப்பது, உயிருக்காகப் போராடுவது என்று, கனமான கேரக்டரில் அம்சரேகா உருக்கமாக நடித்துள்ளார். சாதிவெறியுடன் மனித உயிர்களை எடுக்கும் கொடூர வில்லன் மணிமாறன், குடிகாரனாக வந்து அலப்பறை செய்யும் ‘ஜெய்பீம்’ மொசக்குட்டி, ரெஜினா, மாடுமுட்டியாக வரும் அம்சரேகா தந்தை ஆகியோர் கவனத்தை ஈர்க்கின்றனர்.

லோக பத்மநாபனின் பின்னணி இசை, கதைக்கு ஏற்ப பயணித்துள்ளது. பாடல்களில் கிராமிய மணம் கமழ்கிறது. கே.ராஜசேகரின் கேமரா ஒவ்வொருவரின் மன உணர்வுகளையும், வலிகளையும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது. சாதிய வன்கொடுமைகள் காரணமாக காதலர்கள் எப்படி சிதைக்கப்படுகின்றனர் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்துள்ள இயக்குனர் லோக பத்மநாபன், இறுதியில் எடுக்கும் முடிவு எதிர்பாராதது. இதுபோன்ற ஒரு கதைக்குள், அடுத்தவரின் மனைவிக்கு ஆசைப்படும் காமெடி காட்சியைத் தவிர்த்திருக்கலாம்.

The post செம்பியன் மாதேவி விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Amsarekawa ,Loka Padmanapan ,Loka Padmanaphan ,Amsareka ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சீனாவில் வெளியாகிறது மகாராஜா