×

ஆல்ரவுண்டர் ஐசிசி தலைவர் ஆகிவிட்டார் ஜெய்ஷாவை கிண்டலடித்த பிரகாஷ் ராஜ்

பெங்களூரு: ஐசிசி தலைவர் பதவிக்கு அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா போட்டியின்றி தேர்வானார். வரும் டிசம்பர் 1-ம் தேதி ஜெய்ஷா பொறுப்பேற்கிறார். அவருக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஜெய் ஷாவை விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

அதில், ‘போட்டியின்றி ஐசிசி தலைவராக தேர்வாகி உள்ள இந்திய கிரிக்கெட் உருவாக்கிய ஆக சிறந்த பேட்ஸ்மேன், பந்து வீச்சாளர், விக்கெட் கீப்பர், ஃபீல்டர் மற்றும் அல்டிமேட் ஆல்ரவுண்டருக்கு அனைவரும் கைத்தட்டல் அளித்து வாழ்த்துவோம்’ என தெரிவித்துள்ளார். அவரது இந்த நக்கலான கருத்தை நெட்டிசன்கள் கமென்ட் போட்டு வரவேற்றுள்ளனர்.

The post ஆல்ரவுண்டர் ஐசிசி தலைவர் ஆகிவிட்டார் ஜெய்ஷாவை கிண்டலடித்த பிரகாஷ் ராஜ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : ICC ,Prakash Raj ,Jayshaw ,Bengaluru ,Amit Shah ,Jaysha ,Virat Kohli ,Jai Shah ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்திய அணியை உருவாக்கிய மிகப்பெரிய...