×

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் படத்தில் நாகார்ஜுனா

சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘கூலி’. இந்த படத்தை சன் டிவி நெட்வொர்க் தலைவர் கலாநிதி மாறன் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘எந்திரன்’, ‘பேட்ட’, ‘அண்ணாத்த’, ‘ஜெயிலர்’ என 4 மாபெரும் வெற்றிப் படங்களில் ரஜினிகாந்த் – சன் பிக்சர்ஸ் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. இப்போது 5வது முறை இணைந்துள்ள இக்கூட்டணியால் பலத்த எதிர்பார்ப்புகள் கூடியுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். படத்தில் அவரது கேரக்டர் பெயர் சைமன் என வைக்கப்பட்டுள்ளது. அவரது லுக்குடன் கூடிய போஸ்டர் நேற்று மாலை வௌியிடப்பட்டது. அவரது மிரட்டலான தோற்றம் நேற்று சன் பிக்சர்ஸ் டிவிட்டரில் வெளியானதும் ரசிகர்கள் அதை டிரெண்ட் ஆக்கினார்கள். தொடர்ந்து இதில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் தோற்றம் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

The post சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் படத்தில் நாகார்ஜுனா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nagarjuna ,Rajinikanth ,Sun Pictures ,Chennai ,Sun TV Network ,Chairman Kalanithi Maran ,Lokesh Kanagaraj ,Anirudh ,Girish Gangatharan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED குண்டூரில் பாம்பு கடித்து பலியான ஏமன் நாட்டை சேர்ந்த இளைஞர்