தே.பூவம்பட்டியில் முளைப்பாரி திருவிழா

திருமயம்: திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற முளைப்பாரி விழாவில் திரளான பெண்கள் கலந்த கொண்டு  நேர்த்திக்கடன் செலுத்தினர். பங்குனி உத்திர திருவிழாவையொட்டி திருமயம் அருகே உள்ள தே.பூவம்பட்டியில் முளைப்பாரி எடுக்கும் திருவிழா நடந்தது. இதற்காக தே.பூவம்பட்டியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் கடந்த வாரம் மதுபோடும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பெண்கள் மண்பானை, குடத்தில் மண் நிரப்பி மொச்சை, சோலம், தட்டைப்பயிறு, நெல் உள்ளிட்ட தானியங்களை முளைக்க வைத்தனர்.

இதைதொடர்ந்து நேற்று முளைப்பாரி எடுக்கும் நிகழச்சிக்காக அப்பகுதி பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்து ஊர்வலமாக சென்று பிள்ளையார் ஊரணியில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதேபோல் புலிவலம், அதிகாரிபட்டி, ஆண்டிபட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து அப்பகுதி பெண்கள் முளைப்பாரி எடுத்து குளத்து நீரில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Tags : festival ,
× RELATED மதநல்லிணக்க திருவிழா