×

வெப் சீரிஸாக வருகிறது விஜய் மில்டனின் ‘ கோலிசோடா – தி ரைசிங்‘!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ், ‘கோலி சோடா – தி ரைசிங்’ வெப் சீரிஸின், அதிரடியான டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தயாரிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பில், இயக்குநர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் உருவாக்கியுள்ள இந்த சீரிஸில் நடிகர்கள் ஷாம், அபிராமி, புகழ், ரம்யா நம்பீசன், அவந்திகா மிஸ்ரா, சேரன், ஆர்.கே. விஜய் முருகன், பரத் ஸ்ரீனி, கிஷோர், பாண்டி, உதய ராஜ், முருகேஷ், குட்டி மணி, அம்மு அபிராமி ஆகியோருடன் சீதா, ஸ்வேதா, சுஜாதா, இம்மான் அண்ணாச்சி, ஜான் மகேந்திரன் மற்றும் மதுசூதனன் ராவ் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீரிஸிற்கு பாடல்களை இசையமைப்பாளர் எஸ்.என் அருண்கிரி உருவாக்கியுள்ளார். சைமன் கே. கிங் பின்னணி இசை அமைத்துள்ளார். தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த சீரிஸ் 7 மொழிகளில் (தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி) வெளியாகவுள்ளது.

The post வெப் சீரிஸாக வருகிறது விஜய் மில்டனின் ‘ கோலிசோடா – தி ரைசிங்‘! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Milton ,Disney ,Hotstar ,Ramesh Krishnamurthy ,Vijay ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED செப்டம்பர் 13 முதல் ‘கோலி சோடா ரைசிங்’ வெப் சீரிஸ்!