×

7 பேரை மையப்படுத்தி நகரும் கதை டோபமைன்@2.22

சென்னை: திரைக்கு வந்த ‘வெப்பம் குளிர் மழை’ என்ற படத்தை தொடர்ந்து ஹாஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம், ‘டோபமைன் @ 2.22’. திரவ் எடிட்டிங் செய்து, பாடல்கள் எழுதி இயக்கி நடித்துள்ளார். பிருத்வி ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஆலன் ஷோஜி இசை அமைத்துள்ளார். படம் குறித்து திரவ் கூறுகையில், ‘இக்கதை வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்த 7 பேரைச் சுற்றி நகர்கிறது.

அவர்களின் வாழ்க்கை இன்னும் நடக்காத ஒரு கொலையால் இணைக்கப்படும்போது, அவர்களின் உணர்வுகள் ஒரு விஷயத்துக்கு அடிமையாகுதல் பற்றிய கதையாக நடக்கிறது. ‘குட்நைட்’, ‘லவ்வர்’ ஆகிய படங்களில் நடித்த நிகிலா சங்கர், மற்றும் விஜய் டியூக், ‘குற்றம் கடிதல்’ சத்யா, விபிதா, சதீஷ், சாம்சன், ‘நூடுல்ஸ்’ சக்திவேலன் நடித்துள்ளனர். கிளைமாக்ஸ் பாடலை கபில் கபிலன் பாடியுள்ளார். ஆங்கிலப் பாடலை ‘கைதி’, ‘லியோ’ சரண்யா கோபிநாத் பாடியிருக்கிறார்’ என்றார்.

The post 7 பேரை மையப்படுத்தி நகரும் கதை டோபமைன்@2.22 appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : CHENNAI ,Hashtag FTFS Productions ,Tirav ,Prithvi Rajendran ,Alan Shoji… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை துறைமுகத்தில் பாரம் தூக்க முடியாமல் கிரேன் கவிழ்ந்து விபத்து..!!