×

மோசமாக நடிப்பதாக விமர்சித்தார்கள்: பூஜா ஹெக்டே வருத்தம்

சென்னை: மோசமாக நடிப்பதாக கூட என்னை விமர்சித்தார்கள் என பூஜா ஹெக்டே கூறியுள்ளார். சூர்யா ஜோடியாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்தியில் ‘தேவா’, ‘சர்க்கஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியது: இன்று முன்னணி நடிகைகள் வரிசையில் வைத்து என்னை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இதற்காக நான் ரசிகர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன். சினிமாவுக்கு வந்து 12 ஆண்டுகளை பூர்த்தி செய்துவிட்டேன். ஆரம்ப காலத்தில் நான் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளானேன்.

அழகு பொம்மையாக மட்டுமே இருக்கிறார், நடிப்பு எவ்வளவு கிலோ என கேட்கிறார், மோசமாக நடிக்கிறார் என்றெல்லாம் என்னை விமர்சித்தார்கள். அதையெல்லாம் தாண்டி, இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். இன்று எனது நடிப்பை பாராட்டுகிறார்கள். இதற்கெல்லாம் எனது ரசிகர்கள் கொடுத்த அன்புதான் காரணம். ஆனால் பழைய விமர்சனங்கள் எதையும் நான் மறக்கவில்லை. அதை மனதில் வைத்தபடி ஓடினால்தான், என்னால் இலக்கை அடைய முடியும் என்பதால் அதனுடனே பயணிக்கிறேன். இவ்வாறு பூஜா ஹெக்டே கூறினார்.

The post மோசமாக நடிப்பதாக விமர்சித்தார்கள்: பூஜா ஹெக்டே வருத்தம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Pooja Hegde ,Chennai ,Suriya ,Karthik Subbaraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மலையாளத்தில் நடிக்கிறார் சூர்யா