×

ரசிகரின் குடும்பத்துக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த ராணா: சிகாகோ சாலையில் நடந்த சம்பவம்

சிகாகோ: சிகாகோ சாலையில் திடீரென காரை நிறுத்தி, ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி தந்துள்ளார் நடிகர் ராணா. பாகுபலி படத்தில் ராணா நடித்த பிறகு உலக அளவில் ரசிகர்களிடம் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களில் அவர் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். பாலிவுட்டிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் சிகாகோவுக்கு சென்றிருந்த ராணா, அங்கிருந்து நாடு திரும்புவதற்காக அவசரமாக விமான நிலையத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் அதே வழியாக காரில் சென்றார்.

ராணாவை பார்த்ததும் காரில் இருந்த அவரது குடும்பத்தார் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர். உடனே ராணாவின் காரை பின்தொடர்ந்து கார் ஜன்னல் வழியாக ராணாவை பார்த்து அந்த ரசிகரின் குடும்பம் கையசைத்தது. நாங்கள் உங்களின் தீவிர ரசிகர்கள் என அவர்கள் கூச்சலிட்டதை பார்த்தும் ராணா புன்னகைத்தபடி தனது காரை ஓரமாக நிறுத்தினார். உடனே அந்த ரசிகரும் காரை நிறுத்தி, குடும்பத்தார் ராணாவை நோக்கி ஓடிவந்தனர்.

ராணா அவர்களிடம் கைகுலுக்கி போட்டோக்களுக்கு போஸ் தந்தார். ராணா செய்த இந்த செயலால் அந்த ரசிகரின் குடும்பம் படு சந்தோஷம் அடைந்தது. அவர்களின் ஆசைப்படி காரின் பானெட்டில் ராணா ஆட்டோகிராப் போட்டு தந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் நெருங்கி வரும்போது அவர்களை தள்ளிவிட்டு செல்லும் நடிகர்கள் முன் ராணா வித்தியாசமானவர் என நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

The post ரசிகரின் குடும்பத்துக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த ராணா: சிகாகோ சாலையில் நடந்த சம்பவம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Rana ,Chicago road ,Chicago ,Baahubali ,Bollywood ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ராணா, துல்கர் இணைந்து தயாரிக்கும் காந்தா