×
Saravana Stores

வேதா விமர்சனம்

ராணுவ அதிகாரி ஜான் ஆபிரகாமிடம், ஒருவரை உயிருடன் பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. ஆனால், அந்த மிஷனில் அவர் தோல்வியடைந்ததால் அவரது பதவி பறிக்கப்படுகிறது. பிறகு ஜான் ஆபிரகாம் தனது மனைவி தமன்னாவின் ஊருக்கு வந்து, ஒரு கல்லூரியில் ‘பாக்ஸிங் கோச்’ ஆகப் பணியாற்றுகிறார். அங்கு தீண்டாமை என்பது பழக்கத்தில் இருக்கிறது. பட்டியலின மக்களை உயர்சாதியினர் அடிமை போல் நடத்தி வருகின்றனர். இதுபோல் 150 கிராம மக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்,

பஞ்சாயத்து தலைவர் அபிஷேக் பானர்ஜி. இந்த தீண்டாமைக் கொடுமையில் இருந்து வெளியே வர முயற்சிக்கும் ஷர்வரி, பாக்ஸிங்கில் ஜெயிப்பதன் மூலம் இந்நிலையை மாற்ற முடியும் என்று நம்புகிறார். இதற்கு ஜான் ஆபிரகாம் உதவுகிறார். ஆனால், இதை விரும்பாத அபிஷேக் பானர்ஜி, அந்த கிராமத்தில் இருந்து ஜான் ஆபிரகாமையும், ஷர்வரி மற்றும் குடும்பத்தினரை வெளியேற்றுகிறார். பிறகு அவர்கள் அனைவரையும் கொல்லவும் துணிகிறார். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

கம்பீரமாக வரும் ஜான் ஆபிரகாம், ஆக்‌ஷன் மற்றும் எமோஷனலை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். தமன்னாவுடன் பாசம், எதிரிகளை துவம்சம் செய்யும் ஆக்ரோஷம் என்று, ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். சாதிய பாகுபாடு மற்றும் தீண்டாமைக் கொடுமையில் இருந்து விடுதலை பெறத் துடிக்கும் கேரக்டரில் ஷர்வரி சிறப்பாக நடித்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளிலும் அதகளம் செய்திருக் கிறார். தவிர அபிஷேக் பானர்ஜியின் வில்லத்தனமும், பாடிலாங்குவேஜும் பயமுறுத்துகிறது. ஆஷிஷ் வித்யார்த்தி வழக்கம்போல் உறுமுகிறார். மற்றவர்களும் இயல்பாக நடித்துள்ளனர்.

சாதிய அடக்குமுறையை மையப்படுத்தி நிகில் அத்வானி இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாதியில் இருந்த வேகம், அடுத்த பாதியில் மிஸ்சிங். லாஜிக் இல்லாமல், ஆக்‌ஷன் மற்றும் சேசிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அமால் மாலிக், யுவ ராகவ், அர்ஜூன், மனன் பரத்வாஜ் இசையில் பாடல்கள் ஓகே. கார்த்திக் ஷா பின்னணி இசை கூடுதல் பலம். மலாய் பிரகாஷின் கேமரா, அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் கடுமையாக உழைத்துள்ளது.

The post வேதா விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : John Abraham ,Tamanna ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED காமெடி கதையில் விமல் யோகிபாபு