×

ஊர்வசிக்கு கேரள அரசு விருது

திருவனந்தபுரம்: இந்தாண்டு நடைபெறும் 54வது கேரள மாநில திரைப்பட விருதுக்கு 160 திரைப்படங்கள் பல்வேறு பிரிவுக்குக் கீழ் தேர்வாகியுள்ளன. திருவனந்தபுரத்தில் கேரள கலாச்சாரத்துத் துறை அமைச்சர் சாஜி செரியன் இந்தாண்டுக்கான கேரளத்தின் மாநில விருதுகளை அறிவித்தார். அதன் விவரம்: சிறந்த நடிகர் – பிருத்விராஜ் (ஆடுஜீவிதம்). சிறந்த நடிகை – ஊர்வசி (உள்ளொழுக்கு). சிறந்த படம் – காதல் தி கோர். சிறந்த இயக்குனர் – பிளெஸ்ஸி (ஆடுஜீவிதம்). சிறந்த துணை நடிகர் – விஜய்ராகவன் (பூக்காலம்). சிறந்த அறிமுக இயக்குனர் – பஜில் ரஜாக் (தடவு)

The post ஊர்வசிக்கு கேரள அரசு விருது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : 54th Kerala State Film Awards ,Thiruvananthapuram ,Kerala ,Culture Minister ,Saji Cherian ,State Awards of Kerala ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பாலியல் வன்கொடுமை புகாரில் பிரபல மலையாள நடிகர் எடவேல பாபு கைது!!