×

நடிகர் தெனாலி மகனுக்கு விஜய் சேதுபதி கல்வி உதவி

சென்னை: காமெடி நடிகர் தெனாலி மகனுக்கு, நடிகர் விஜய் சேதுபதி கல்வி கட்டணம் முழுவதும் செலுத்தி உதவியுள்ளார். விவேக் உடன் அதிக படங்களில் காமெடியில் நடித்தவர் தெனாலி. இவரது மகன் வின்னரசன் பிசியோதெரபி படிப்பதற்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத சூழ்நிலையை அறிந்த நடிகர் பாவா லட்சுமணன், விஜய் சேதுபதியிடம் நேரில் அழைத்துச் சென்று நிலமையை கூறினார்.

உடனடியாக அவருக்கான கல்வி கட்டணத்தை விஜய் சேதுபதி செலுத்தியுள்ளார். அத்துடன் அவரது முழு படிப்பு செலவையும் ஏற்றுள்ளார். என் சந்ததி கல்வியிலும், வருங்காலத்தில் பொருளாதாரத்திலும் உயர, விஜய் சேதுபதி செய்த உதவியை வாழ்நாளில் நானும், என் மகனும் மறக்கவே முடியாது என நன்றி கூறியுள்ளார் தெனாலி.

 

The post நடிகர் தெனாலி மகனுக்கு விஜய் சேதுபதி கல்வி உதவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay Sethupathi ,Denali ,Chennai ,Vivek ,Vinnarasan ,Kollywood Images ,
× RELATED நான் இன்னும் இருட்டுல தான் இருக்கேன்! - Vijay Sethupathi speech at Kozhipannai Chelladurai Pressmeet